கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021

எமது கடற்பரப்பில் உள்ள வழங்களை அழிக்கவும் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் தமது கடற்பரப்பிலள்ள வளங்களை முற்றாக அழித்தொழித்த பின்னர் எமது கடற்பரப்பிற்கள் உள்நுழைந்து சட்டவிரோதமானதும் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் நாளாந்தம் பெரும் பின்னடைவுகளை சந்தித்துவருகின்றது. இதன்காரணமாக அவர்களது குறித்த தொழில் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனடிப்படையில் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாத்து முன்னேற்றம் காணச்செய்யும் நடவடிக்கைகளை எவ்விதமான இடர்பாடுகளையும் சவால்களையும் எதிர்கொண்டு ஒரு பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றேன்

இதனிடையே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எனக்க இந்த பெரும் பொறுப்பு மிக்க அமைச்சை தந்ததன் நோக்கம் வடக்கிற்கும் தெற்கிற்குமான இன நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கும் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலேயே வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து பலப்படுத்தவதற்கும் கடற்றொழிலூடாக இலங்கையின் அந்நியச் செலாவணியை மேலும் வளர்த்தெடுப்பதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான குறிப்பாக எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கமாகவே இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன் வடக்கில் அரச மற்றம் தனியார் காணிகள் சுவிகரிப்பதை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக எமது நிலம் எமக்கே சொந்தம் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கிணங்க இங்குள்ள காணிகள் அனைத்தும் எமது பகுதி மக்களுக்கே உரியது.

அதிலும் குறிப்பாக பாவனையில்லாது இருக்கும் காணிகளை பாவனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் குறிப்பாக குறித்த காணிகளை காணிகளில்லாது இருக்கும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் தரிசு நிலங்களை பயிர்செய் நிலங்களாக மாற்றுவதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பலாலி விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் வடமாகாணம் பொருளாதார...
ஈழமக்கள் ஜனநாய கட்சியின் செயலாசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பங்கேற்புடன் இந்துக்களுக்கான...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை - 2 வருடங்களின் பின் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் உணவகம் ...