எமது வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பாளர்கள் – டக்ளஸ் எம்.பி.!

Tuesday, October 22nd, 2019

நாம் ஆதரவு கொடுக்கும் வேட்பாளர் வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் உருவாக நீங்கள் எம்மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் நான் உங்களுக்கு கூறும் வாக்குறுதிகளுக்கும் அதனை நிறைவேற்றிக் காட்டுவதற்கும் நானே பொறுப்பு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளர்.

இன்றையதின மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் முள்ளிக்குளம் பரலோகமாதா நகர் மக்கள் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யார் வேட்பாளராகவும் இருக்கலாம். அவர்களை நம்பி எமது மக்களுக்கு என்றும் நான் வாக்குறுதிகள் கொடுத்தது கிடையாது.எம்மை நம்பி எமது செயற்பாடுகளை நம்பித்தான் நாம் ஒவ்வொரு செயற்பாடுகளையும் மக்கள்முன் கூறி வருகின்றோம்.

நாம் உங்களிடம் வந்துள்ளது எமது நலன்களை முன்னிறுத்தி வாக்குக் கேட்க அல்ல. உங்களை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காகவே உங்களிடம் வந்துள்ளேன்.

என்மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.நாம் உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் வீண்போக விடமாட்டேன்.

கடந்த காலங்களில் எமது மக்கள் கூட்டமைப்பினரின் போலித்தேசியத்திற்குள் வீழ்ந்து தமது வாழ்வியலை இழந்துவிட்டனர்.

ஆனால் நாம் எமது மக்கள் அனுபவித்துவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாணவேண்டும் என்பதற்காகவும் மக்களை வெற்றியாளர்களாக்குவதற்காகவே அயராது உழைத்துவருகின்றோம்.

கடந்த காலத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களது அரசில் நான் அமைச்சராக இருந்து எமது மக்களின் பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருக்கிறேன். மஹிந்த ராஜபக்சவுடன் எமக்கு மிக நீண்ட நட்பும் புரிந்துணர்வும் உள்ளது.இதை பயன்படுத்தி நாம் பல முடியாத காரியங்களையும் நியமாக்கிக் காட்டியிருக்கிறேன்

அதனால் தான் நான் கூறுகின்றேன் என்னை நம்புங்கள் என்று.

எமது அரசியல் தீர்க்கதரிசனங்களே இன்று நியமாகியுள்ளது.

அந்தவகையில் எமது வழிமுறை நோக்கி அணிதிரண்டு எமது கரங்களை பலப்படுத்துங்கள்.உங்கள் எதிர்காலத்தை நான் வளமாக்கி தருகின்றேன் என்றார்.

Related posts:

தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் - யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்க...
கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப...
தள்ளாடியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணையை அமைப்பதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் விருப்பம் – ஏது...