எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான முதற்கட்ட நஸ்டஈட்டினை வழங்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு வழங்கினார்.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மற்றும் துறைசார் பணிப்பாளர்களுடனான மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே மேற்குறித்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற களப்பு அபிவிருத்தி, வி.எம்.எஸ் கருவிகளைப் பொருத்துவதற்கான முதற்கட்டப் பயனாளர் தெரிவு உட்பட அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத் திடடங்கள் தொடர்பாக கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
Related posts:
வாக்குறுதிகளுக்கு செயலுருவம் கொடுத்தவர்கள் நாம் - கட்டைக்காட்டில் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கின் பாரிய நிதி மோசடிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது "சப்றா" நிறுவனமே - நாடாளுமன்றில...
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு வேண்டும் - நாடாளுமன்றில் ட...
|
|