ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீதான தாக்குதல் சம்பவமானது கண்டனத்திற்குரியதாகும்.

மூத்த ஊடகவியலாளர் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது கண்டனத்திற்குரியதாகும். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வடபுலத்தில் நடந்த சம்பவங்களையும், அதனால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இழப்புக்களையும், துயரங்களையும் வெளி உலகுக்கு செய்திகளாகவெளிக்கொண்டு வந்ததில் பெரும்பங்காற்றிய ஊடகவியலாளர் பரமேஸ்வரன் அவர்களை மென்வலு தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் என்று கூறுவோர் அடியாட்களை ஏவிவிட்டுத் தாக்கிய சம்பவம் கருத்துரிமைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (03.09.2017) தினம் யாழ்ப்பாணம் பொது நூல் நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வில் தனது கருத்தை வெளியிட்ட போது அந்த கருத்துக்கு எதிராக தமது கருத்தை முன்வைக்காமல் வன்முறையைப் பிரயோகித்திருக்கின்றார்கள்.
ஆரம்ப காலத்தில் தமது கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை ‘மேடைக்குப் பின்னால் போனால் கடசியின் தம்பிமார் போதிய விளக்கத்தைக் கொடுப்பார்கள்’ என்று கூறியவர்களும், தமக்கு மாற்றான கருத்துக்கொண்டவர்களுக்கு ‘இயற்கை மரணம் இல்லை’ என்று கூறி அத்தகையவர்களை ‘கொலை செய்யுங்கள்’ என்று இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டியவர்களும் இவர்கள்தான். அதேபாணியில் இன்று ஒருவரின் கருத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகின்றார்கள்.
ஊடகவியலாளர் பரமேஸ்வரன் அவர்களை தாக்கியவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும், மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கௌரிகாந்தன் மற்றும் பகீரதன் தலைமையிலானவர்களே தாக்கியதாகவும், அத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருப்பதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் அதேவேளை, அவர் மீதான அச்சுறுத்தலிலிருந்து அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். எனவே தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரின் முறைப்பாட்டுக்கு அமைவாக அரசியல் தலையீடற்ற வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
Related posts:
முல்லை மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து...
எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் – அமைச்சர் ...
|
|
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வு இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திது...
தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதியின் புனரமைப்பு பணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 4.22 மில்ல...
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்த...