உணர்வுகளைப் பரிமாறிக்கொ ள்ளும் சூழலை ஏற்படுத்து வதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்!

Tuesday, November 21st, 2017

உணர்வுகளைப் பறிமாறிக் கொள்ள இயலுமான சூழலை ஏற்படுத்துவதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்தை வலியுறுத்த விரும்புகின்றேன் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்ர்.

இன்றைய தினம் உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது நாட்டில் தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டிருப்பதாகவே உணர்கின்றேன். குறிப்பாக, தற்போதைய நிலையில், வவுனியா வளாகத்தினை பல்கழகைக் கழகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஏற்கனவே முன்வைத்திருக்கின்றேன். அதே நேரம், மலையகத்திற்கான பல்கலைக்கழகத்தின் தேவையும் பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் எமது நாட்டின் தேவைக்கேற்ப பொருத்தமான பகுதிகளில் மேலும் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படுமானால் அது எமது இளைய பரம்பரையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே வேளை, எமது நாட்டின் உயர் கல்வித்துறையைப் பொறுத்தமட்டில் தனியார்த் துறையினருக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படுகின்ற வாய்ப்புகள் வெறுமனே வியாபார நோக்கத்தினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்லாத, அரசினால் அனுமதிக்கப்படுகின்ற பொது கல்விக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டதாவே இருத்தல் வேண்டும்.

மேலும் எமது பல்கலைக்கழக கட்டமைப்பின் நிர்வாக ரீதியலான செயற்பாடுகள் எமது நாட்டின் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டியதும், வினைத்திறன் மிக்கதாக வலுப்படுத்த வேண்டியதும் கட்டாயமாகும்.

யுத்தத்திற்குப் பின்னரான எமது நாட்டில், தேசிய நல்லிணக்கம் பற்றி பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. தேசிய நல்லிணக்கத்தை எடுத்த எடுப்பில் மேல்மட்ட வாரியாக எற்படுத்திவிட முடியாது. அது எமது ஆரம்பக் கல்விக் கட்டமைப்பிலிருந்தே அத்திவாரமிடப்படல் வேண்டும். அந்தவகையில், தேசிய நல்லிணக்க உருவாக்கத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டமைப்பானதும் இன்றியமையாதது.

மொழி ரீதியாகவும், பெரும்பாலும் இன ரீதியாகவும் தனித்தனியாக ஆரம்பம் முதல் கல்வி கற்று வருகின்ற மாணவர்கள் – பெரும்பாலும், சகோதர இனங்களுடனான பரிச்சயமும் அற்ற மாணவர்கள் – பல்கலைக்கழக பிரவேசத்தின் பின்னரே சகோதர இன மற்றும் மொழிகளில் பரிச்சயமுள்ள மாணவர்களுடன் இணைந்து சொற்ப காலம் வாழ வேண்டிய வாய்ப்பினைப் பெறுகின்றனர். இத்தகைய நிலையில், அந்த மாணவர்களிடையே நட்பு ரீதியிலான – பரஸ்பரம் உணர்வுகளைப் பறிமாறிக் கொள்ள இயலுமான சூழலை ஏற்படுத்துவதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அவ்வாறின்றி, பரஸ்பரம் சந்தேகங்களையும், குரோதங்களையும், பகைமையினையும் வளர்த்துக் கொள்ளத்தக்க சூழலுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Untitled-5 copy

Related posts:

உயிர் நீத்தோரை மட்டுமன்றி, உயிர்வாழப்  போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்து உதவிட முன்வர வேண்டும் - ...
விழித்துக் கொண்டதால் நான் பிழைத்துக் கொண்டேன்: கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!
வடக்கின் கடற்றொழிலுக்கு விசேட நிதி - சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவோம் அமைச்சர் டக்ளஸ் தெரி...