உணர்வுகளுடன் செயற்படுங்கள் – சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

மக்களின் நலன்களிலும் கட்சியின்மீதும் உணர்வுடனும் விசுவாசத்துடனும் சேவையை முன்னெடுத்துச் செல்லுங்கள் என கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கட்சியின் யா மாவட்டத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனரஇதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் கூறுகையில் –
சமூகங்களின் அடிமட்டங்ளிலிருந்து மக்களது சேவைகளை முன்னெடுக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மக்கள் மீது உணர்வுடன் செயற்பட வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தை கொண்டுவர காரணமாக இருந்தவர்கள் நாம். நீங்கள்
சேவை செய்யும் இடங்களில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் பல ஆயிரம் இளைஞர் யுவதிகள் தொழில் அற்றிருக்கும் நிலையில் நீங்கள் கடந்த காலங்களில் கட்சியுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவுகளே இந்த நியமனங்கள் கிடைக்க காரணம். இதுதான் வரலாறு.
அந்த வகையில் உங்களுக்கும் கட்சியை பாதுகாக்க வேண்டிய பெரிய பங்கு உண்டு.
தென்னிலங்கையில் ஒருவருக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்குமானால் அவர்கள் வழங்கியவர்களுக்கு மிக நன்றியுடன் இருந்திருப்பார்கள். ஆனால் இங்கு நிலைமை வேறாக உள்ளது.
நீங்கள் உங்களதுக் உங்கள் உறவுகள் சமூகங்கள் போன்றவற்றை வழப்படுத்துவது போல கட்சியையும் பாதுகாப்பது அவசியம். இதை நான் அதிகாரத்தில் இருப்பதால் கூறவில்லை. உங்களுக்கு உணர்வுகள் வரவேண்டும் என்பதற்காகவே கூறுகின்றேன்.
தற்போது நான் கடல்தொழில் மற்றும் நீரக வள மூல அமைச்சராக இருப்பதால் அது ஒரு தேசிய அமைச்சாக இருப்பதால் பரந்துபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
இதை முன்னெடுத்து செல்ல உங்களது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|