ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு மே மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்…

Saturday, April 2nd, 2016

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு மே மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படிடையிலும்,கொள்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கிலும் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு நடுப்பகுதியில் இம்மாநாட்டை நடாத்துவதென ஏற்கனவே திட்டமிட்டதற்கு அமைவாக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில்  யாழ்ப்பாணத்தில் மாபெரும் எழுச்சியுடன்  கட்சி மாநாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான பூர்வாங்க வேலைகள் தற்போது பெரும் ஏற்பாட்டுடன் பிரதேசங்கள் ரீதியாகவும் மாவட்டங்கள் ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள  டக்ளஸ் தேவானந்தா கட்சி மாநாடு தொடர்பில் மக்கள் மிகுந்த ஆர்வங்காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இம்மாநாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு விரைவில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகவும் இதன்போது குறிப்பாக மாநாடு நடைபெறும் இடம் குறித்து  அறியத்தரப்படுமெனவும் மேலும் தெரிவித்ததார்.

இதற்காக பிரத்தியேகமாக குழுவொன்று நியமிக்கப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Related posts: