ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!

Thursday, July 2nd, 2020

தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது என்பது மக்களது விருப்பத்துடன் கூடிய ஜனநாய உரிமை. இந்த உரிமையை மக்கள் சரியானாதாகவும் தமது எதிர்காலம் கருதியதாகவும் இம்முறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கான முழுமையான வேலைத்திட்டங்களையும் நாம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் –

நாம் மக்கள் மத்தியில் எண்ணற்ற பணிகளை முன்னெடுத்திருந்த போதும் அதற்கான அறுவடைகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்ல. இதற்கு காரணங்கள் பல இருந்தாலும் எமது செயற்பாடுகளும் போதுயளவு மக்கள் பயப்படாமையும் அமைக்கின்றது.

ஆனால் இம்முறை அந்த அறுவடைகளை நாம் பெற்றுக்கொள்ள நடைபெறவுள்ள தேர்தலுக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

அத்துடன் குறித்த தேர்தலில் எமது அரசியல் பலத்தை அதிகரிப்பதற்காக வேட்பாளர்கள் மட்டுமல்லாது செயற்பாட்டாளர்களும் போட்டி போட்டு உழைக்க வேண்டும் என வலியுறுத்திய செயலாளர் நாயகம் அதற்காக அனைவரும் பெதங்களை மறந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

முன்பதாக குறித்த சந்திப்பின்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Related posts: