இறுதித் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் 13ஆவது திருச்சட்டமே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
Thursday, November 2nd, 2017இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமான 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொள்வது. இது ஒரு முடிவல்ல. எமது அரசியல் உரிமைகளுக்கான தீர்வை நோக்கிய ஓர் ஆரம்பம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இந்த நடைமுறை தற்போதைய எமது அரசியல் யாப்பில் இருக்கின்றது. முழுமையாக அல்லாதவிடத்தும், நாடாளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அனைத்து மக்களாலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான அனைத்து அரசியல் கட்சிகளும் இன்று இதில் பங்கேற்றிருக்கின்றன. இதனைத் தூற்றியோர்கூட இறுதியில் ஓடி வந்து இந்த முiறைமையை கட்டி, அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை செயற்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையோ, மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்போ அவசியமில்லை.
எனவே, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக உரிய முறையில் செயற்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து, முன்னோக்கிச் செல்கின்றபோது, எமது மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றபோது,
எமது மக்களின் அபிலாiஷகள் நிறைவேறுகின்றபோது, மக்களிடையே இந்த முறைமை தொடர்பில் படிப்படியாக நம்பிக்கை ஏற்படும்.
இந்த முறைமையினால் எமது நாடு பிரிந்து போகாது என்ற நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படும்.
இந்த முறைமையின் ஊடாக எமது அன்றாடத் தேவைகள் முதல் அரசியல் உரிமைகள் வரையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடையே ஏற்படும்.
அவ்வாறானதொரு நிலையில், மேலும் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்து, எமது மக்களின் அபிலாiஷகளை இலகுவாக எட்ட முடியும் என்பதே எமது நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகும்.
மதசார்பற்ற நாடு, விஷேட அதிகாரங்கள், மொழிகளுக்குச் சம அந்தஷ;து, வடக்கு, கிழக்கு இணைந்த மாநில நிர்வாக மையம், பொலிஸ், முப்படைகள் உள்ளிட்ட அரச தொழில்வாய்ப்புகளில் இனவிகிதாசாரம் பேணப்படுதல் போன்றவையே எமது மக்களின் பிரதான அரசியல் அபிலாiஷகளாக உள்ளன.
இவை, இந்த நாட்டைப் பிரிக்கவோ அல்லது ஏனைய இனங்கள் மீது மேலாதிக்கம் செலுத்தவோ போவதில்லை என்பதையும், இது இனங்களுக்கு இடையே மேலும் நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு வழி வகுக்கும் என்பதையும் எமது சகோதர மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.
இதனையே நாங்கள் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றும், ஐக்கிய இலங்கைக்குள் சமதான, சகவாழ்வு என்றும் கொள்கை நிலை கொண்டுள்ளோம். இந்த நிலை நோக்கி நாம் படிப்படியாக முன்னேறுகின்ற வழிமுறையே எமது நாட்டுக்குப் பொருத்தமானது என்பது எமது நம்பிக்கையாகும்.
ஆகவே, அதிகாரங்களை பகிர்வதும், அவற்றை உரிய முறையில் செயற்படுத்துவதும், செயற்படுத்த வழிவிடுவதும், இங்கே நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் எந்தவிதமான கபடத்தனங்களும் இருக்கக் கூடாது.
பகிரப்படுகின்ற அதிகாரங்கள் தொடர்பில் மயக்கமற்ற, வௌ;வேறு பொருள் கொள்ளப்பட இயலாத வகையிலான வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுவது மிகவும் அவசியமாகும்.
ஜனாதிபதி அவர்களும் இத்தகைய தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவித்து வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதே நேரம், உரிய இலக்கினை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாது, உரிய இலக்கினை குழப்புகின்ற மாகாண சபைகள் இனங்காணப்பட்டு, அவை தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.
நோக்கமும், அதற்கான முயற்சியும் அர்ப்பணிப்புடன் கூடியதான நேர்மையுடன் முன்னெடுக்கப்படுமானால் எம்மால் நிச்சயமாக இந்த இலக்கினை வெற்றிகொள்ள முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
புதிய அரசியல் யாப்பு ஒன்றின் தேவை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. அது, இந்த நாட்டு மக்களது மனித உரிமைகள் உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே காணப்படுகின்றது.
அந்தவகையில், இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும், தற்போதைய எமது அரசியல் யாப்பில் இருக்கின்ற, 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை விடவும் முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வுகளைக் கொண்ட வகையிலும் முழுமைப்படுத்தப்பட்ட புதிய அரசியல் யாப்பு எமது நாட்டில் நிறைவேற்றப்படுமாயின்,
அல்லது, புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படாமல், தற்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளைவிட முன்னேற்கரமான அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கியதான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமாயின் அதனை நாங்கள் ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்பதனை மீண்டும் தெரிவித்து,
அத்தகையதொரு புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட இயலாத சூழ்நிலை ஏற்படுமானால், 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு படிப்படியான அதிகாரப் பகிர்வு நோக்கிய வழிமுறையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
Related posts:
|
|