இனவாதக் குரலுக்கு எடுபட்டுப் போனால் ‘திகன” பகுதியில் ஏற்பட்ட கதிக்கே முழு நாட்டுக்கும் ஏற்படும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 21st, 2018

வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல், தாக்கல் செய்யப்பட்ட வழக்ககளும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் அரசியல் கைதிகளைப் பாரத்து ‘இவர்கள் பெரும் புலிகள், இவர்களை விடுதலை செய்யக் கூடாது’ என கூக்குரலிடும் தென்பகுதி பேரினவாதிகளின் போலி ஆட்டங்களுக்கு பயந்தே அரசு இந்த தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் வீண் காலதாமதங்களை ஏற்படுத்தி வருகின்றது என்றால், அது வேதனைக்குரிய விடயமாகும். வெட்கப்படக் கூடிய விடயமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம,; நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –

இனவாதக் குழுக்களின் குரலுக்கு எடுபட்டுப் போனதால் அண்மையில் அம்பாறை மற்றும் திகன போன்ற பகுதிகளில் ஏற்பட்ட கதிக்கே இந்த நாடு முழுமையாக ஆட்படக்கூடும் என்ற விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இனவாதத்தையும், மத வாதத்தையும் தூண்டுவோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென சுயாதீன ஆணைக்குழுக்களை இந்த அரசு அமைக்க முற்பட்ட காலத்திலேயே நாம் வலியுறுத்தியிருந்தோம என நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: