இது மாற்றத்தின் காலம் : வடமராட்சியில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, February 6th, 2018

மக்களுக்கான நிதியை மோசடி செய்து அதனூடாக தமது சுயநலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொய்முகங்கள் தற்போது வெளுக்கத் தொடங்கியுள்ளதால் அவர்கள் மக்கள் முன்னே செல்வதற்கு அஞ்சுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்  தெரிவிக்கையில் –

மக்களின் அபிவிருத்திக்காக அரசினால் கொடுக்கப்பட்ட நிதிகளை மட்டுமன்றி அரசிடமிருந்து மக்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிதிகளையும் இன்று ஏப்பம் விட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிதி மோசடிக்காரர்களாகவே மக்களுக்கு தென்படுகின்றனர்.

அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மோசடிகள் இன்று அம்பலமாகியுள்ளதனால் மக்கள் அவர்களை ஓரம் கட்டி வருகின்றனர். இதன்காரணமாக அவர்கள் இன்று மக்கள் முன் செல்வதற்கு அஞ்சுகின்றனர்

அந்தவகையில் சுயலாபத்துக்கான கூட்டாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றதே தவிர மக்களின் நலன்சார்ந்து கூட்டாக இது ஒருபோதும் செயற்பட்டதும் இல்லை செயற்படப் போவதுமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் எங்களின் கரங்களுக்கு கிடைக்கப்பெறும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


பெரும்போக செய்கைக்கு முன்னதாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வல...
சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும். – நாடாளுமன்றில் அமைச்சர்...
திட்டங்களை ஆராய்வதற்கான குழு அமைத்த அமைச்சர் டக்ளஸ் - ஜனாதிபதி மாளிகையையும் பார்வையிட்டார்!