இடமாற்றம் பெற்றுத் தாருங்கள்: முலைத்தீவில் பணிபுரியும் பொருளாதார உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் கோரிக்கை!

Saturday, December 7th, 2019

முல்லைத்தீவு மாவட்டத்த்கில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிலையில் இதுவரை இடமாற்றம் வழங்கப்படாமையால் பாதிக்கப்பச்டுள்ள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றது.
யாழ் மாவட்டத்தில் இருந்து நியமனம் பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்த்கில் கடந்த 7 ஆண்டுகளாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றிவரும் நிலையில் தமக்கு வழமையான இடமாற்றம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அதில் தாம் உள்வாங்கப்படவில்லை. இதனால் தாம் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எமது நியாயமான பிரசினைகளை கருத்தில் கொண்டு இடமாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்சு தாருங்க என கோரிக்கை விடுத்தனர்.
குறித்த உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்ட அமைச்சர் அது தொடர்பில் காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தர முயறைப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் - வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
பலாலி, அன்ரனிபுரம் மக்களின் அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீ...
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் பிரஸ்தாபிப்பு - இந்திய பட்டதாரிகளையும் அரச சேவையில...