கிளிநொச்சி மாவட்டதில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, January 7th, 2022

கிளிநொச்சி மாவட்டதில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில், கடந்த காலங்களில் பொது மக்களினால் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் யுத்தம் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படாத நிலையில் காடுகளாக மாறிய காணிகள் – கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை – அபிவிருத்தி பணிகளுக்காக கோரப்பட்ட காணிகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் போன்றவற்றை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், வனப் பாதுகாப்பு, வன ஜீவராசிகள் பாதுகாப்பு ஆகியவற்றின் அமைச்சு அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related posts:


படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...
சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலினமான அரசியலை கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் - அமைச்சர் டக்...
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விட...