ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு !

Thursday, July 14th, 2022

ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான புறச் சூழல்கள் உருவாக்கி, குறித்த விவகாரம் நியாயமாக அணுகப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று(14.07.2022) கருத்துக்களை பரிமாறியபோதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்த விடயம் தொடர்பான கருத்தினையும் தெரிவித்தார்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்திலும் பிரஸ்தாபிக்க இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு மக்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் நியாயமான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை பதில் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பதாகவும் தெரிவித்துள்ளார். – 14.07.2022

Related posts:


நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் தமிழ் சமூகத்தை சீரழித்துள்ளது - சர்வமத பிரதிநிதிகள் சந்தி...
பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...