அல்வாய் தேவாலய வளாகத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீளவும் இயங்கவுள்ளது சந்தை!

Wednesday, October 18th, 2017

அல்வாயில் அமையப்பெற்றுள்ள புராதன வரலாற்றைக்கொண்ட தேவாலய வளாகத்தில் தற்காலிகமாக சந்தையை மீள இயக்குவது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

அல்வாய் பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் குறித்த தேவாலய பகுதிகளை பார்வையிட்டதுடன் அது தொடர்பாக உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

முன்னைய காலங்களில் குறித்த தேவாலய வளாகத்தில் சந்தை ஒன்று இயங்கிவந்த நிலையில் குறித்த சந்தையை தொல்லியல் திணைக்களத்தினர் நடத்த அனுமதி மறுக்கின்ற நிலையில் அப்பகுதியிலுள்ள வீதிகளில் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை இற்றைவரை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த சந்தையை தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் அங்கு மீண்டும் இயங்கவைக்கவேண்டும் என மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் தொடர்ச்சியாக கோரிக்கையினை முன்வைத்துவந்தனர்.

இதனடிப்படையில் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்துகொண்டார். இதனடிப்படையில் குறித்த சந்தையை தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் தேவாலய வளாகத்தில் மீள இயக்குவதற்கு செயலாளர் நாயகம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையில் குறித்த சந்தை தேவாலய வளாகத்தில் மீள இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்

Related posts:

குடும்பங்களை  தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் தேசிய மத்திய நிலையம் ஊடாக பூர்த்திசெய்யப்படும் - ...
நிரந்தர நியமனம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாகாண சுகாதார தொண்டர்கள்  கலந்தரையாடல்!
யாழ் நகரின் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகாணும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் த...