அரசியல் ரீதியிலான பயமே ஈ.பி.டி.பியை சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, November 4th, 2022

ஈ.பி.டி.பி யை  சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பது, அரசியல் ரீதியிலான பயமே தவிர,  வேறு எந்த காரணமும் அல்ல என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, இந்த உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி பிரதிநிதிகள் அமைச்சர்  தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது எதிர்கால  நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடிய வேளையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மேற்கொண்ட கருத்தை தெரிவித்தார்.

இதனிடையே

வன்னி மாவட்ட மட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்றி வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்த கிளியூரான் விளையாட்டு கழகம், தாங்கள் பெற்றுக்கொண்ட வெற்றிக் கிண்ணத்துடன் மரியாதை நிமித்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குடும்பங்களை  தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் தேசிய மத்திய நிலையம் ஊடாக பூர்த்திசெய்யப்படும் - ...
வடக்கிற்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அநுராதபுரத்துக்கு பாரப்படுத்துவதற்கு மேற்கொள...
கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறை தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...

அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்த...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி: சிலதினங்களில் வவனியாவுக்கு பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்க சுகாதார அமைச்சர் பணி...
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...