அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புன்னைநீராவியடியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதிகள் வர்த்தகர்களிடம் கையளிப்பு!
Thursday, February 29th, 2024கரைச்சி பிரதேச சபை புன்னைநீராவியடி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த பழைய கடைத்தொகுதிகளுக்கு பதிலாக LDSP (BT2) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 15 கடைத்தொகுதிகளே இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த கடைகள் பிரதேச சபையின் ஒப்பந்த திட்டங்களுக்கு அமைவாக மாதாந்தம் 3000 ரூபா வாடகையின் அடிப்படையில் குறித்த பிரதேச சபை வர்த்தகர்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கடைகள் வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன
000
Related posts:
யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறுடக்ளஸ் தேவா...
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த...
ஜனாதிபதி தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது கிராம சேவையாளர்கள் நியமனம் - பிரதமர் தினேஸ் அமைச்சர் டக்ளஸ் ...
|
|