அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – நெடுந்தீவு கடலில் பலியான அமலமேயன் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் நிதி இழப்பீடாக வழங்கிவைப்பு!

Thursday, April 28th, 2022


கடற்தொழில் நடவடிக்கையின்போது இயற்கை அனர்த்தத்தில் சிக்கி நெடுந்தீவு கடற்பரப்பில் பலியான கடற்றொழிலாளர் ஒருவரது குடும்பத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையை அடுத்து ஒரு மில்லியன் நிதி இழப்பீடாக இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த வருடம் தொழில் நடவடிக்கைக்காக கடலுக்கு சென்றிருந்தபோது இயற்கை அனர்த்தத்தில் சிக்கி பலியான மரியவேதநாயகம் அமரலமேயன் என்பவரது குடும்பத்தினருக்கே குறித்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற குறித்த இழப்பீடு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிஸ்னன் குறித்த இழப்பீட்டுக்கான காசோலையை அனர்த்தத்தில் பலியான அமரலமேயனின் தந்ததையாரிடம் வழங்கிவைத்திருந்தார்.
இதன்போது கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக பொறுப்பாளர் முரளி, செடுந்தீவு பிரதேச கடற்றொழில் திணைக்கள் உத்தியோகத்தர் மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத...
மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட...
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!