அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – மடு அன்னையின் சொரூப வீதியுலாவின் போது வீதிகளில் ட்ரோன் வானூர்தி மூலம் மலர் சொரிய அனுமதி!

Wednesday, April 17th, 2024

மடு அன்னையின் சொரூபம் விஜயங்களின்போது பயணப் பாதைகளில் ட்ரோன் வானூர்தி மூலம் அன்னைக்கு பூச்சொரிந்து சிறப்பிப்பதற்கு தேவையான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக் கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மடு அன்னையின் சொரூபம் விஜயம் தற்போது மேற்கொண்டு வருகின்றது

இந்நிலையில், அன்னையின் பயணப் பாதையெங்கும் ட்ரோன் மூலம் அன்னைக்கு பூச்சொரிந்து சிறப்பிப்பதற்கு தேவையான அனுமதியை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நிகழ்வுகளின் ஏற்பாட்டுக்குழுவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி ட்ரோன் வானூர்தி மூலம் மடு அன்னையின் சொரூபத்திற்கு பூச்சொரிவதற்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக பாதுகாப்பு காரணமாக தனிப்பட்டவர்களால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் ட்ரோன் வானூர்தி பாவனை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி குறித்த அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலி...
நிலைமாறுகால நீதி நாட்டுக்கு வருமோ தெரியாது ஆனால் நிலைமாறாகால அநீதி எப்போதும் ஓயாது – நாடாளுமன்றில் ட...
பெரும்போக செய்கைக்கு முன்னதாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வல...

வீடமைப்புத் திட்டங்களில் வலது குறைந்தோருக்கென பிரவேச வசதிகள் தேவை - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்த...
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிள...
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஷேட விஜயம் – மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர...