அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்கள் விஷேட கலந்துரையாடல்!

வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பருத்தித்துறை பிரதேச செயலக மண்பத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் இந்திய கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகளினால் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக் கூறினர்.
குறிப்பாக, எல்லை தாண்டிய இந்தியக் கடற்றொழிலாளர்களின் கடற் கலங்களினால் இடித்து மூழ்கடிக்கப்பட்ட படகிற்கான இழப்பீடு உட்பட்ட இழப்பீடுகளுக்கு காப்புறுதி வழங்கப்படுவதில் காணப்படும் இழுபறிகள் போன்ற பல்வேறு விடயங்கள் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக பருத்தித்துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொலிகண்டியில் கைவிடப்பட்டுள்ள ஐஸ் தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.
சுமார் 5000 கிலோ கிராம் கடலுணவுகள் களஞ்சியப்படுத்தக் கூடிய குறித்த ஐஸ் தொழிற்சாலை, பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக, இருந்த காலத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|