ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 11

Wednesday, March 30th, 2016

ஒட்டுசுட்டான் பண்ணையருகே ஒரு சிறு குளம். அந்தக் குளத்தருகேதான் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது துப்பாகிச் சுடும் ஆரம்பப் பயிற்சிகள் ஆரம்பமாகின!

ஆரம்பத்தில் கிட்ட இலக்குகளை வெற்றிகொள்ள ஆரம்பித்ததன் பின்னர் தூர இலக்குகள் எனப் பயிற்சிகள் தொடர்ந்தன!

இந்தப் பயிற்சிகள் எதுவும் தோழருக்கு கஸ்டமாக இருக்கவில்லை! தனது பெரிய தந்தையினால் சில நாட்களாகத் தொடர்ந்து  வழங்கப்பட்ட இப் பயிற்சிகளில் குறுகிய காலத்தில் தோழர் தூர இலக்குகளைக்கூட இலகுவில் அடையக்கூடிய திறமையினைப் பெற்றார்!

தோழரின் பெரிய தந்தையார் எப்போதும் தற்காப்பு குறித்தே  முதலிடம் கொடுத்து வலியுறுத்தி வந்தார்! இது பற்றி தோழர் ஒரு முறை கூறுகையில் –

‘தற்பாதுகாப்பிற்காக எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற அக்கறை – ஆர்வம் எனக்குள் இருந்தது!

இந்த அக்கறை – ஆர்வம் குறித்து எனது பெரிய தந்தை பெரிதும் மகிழ்ச்சி கொண்டிருந்தார்! எமது இளைஞர்களது எழுச்சியை ஒடுக்குவதற்கு பொலிஸாரும் – பாதுகாப்புத் தரப்பினரும்எப்போதும் முனையலாம்! அது எப்போது என்பது  எங்களுக்குத் தெரியாது! எனவே, அதற்கேற்ப  எப்போதைக்கும் முகங்கொடுக்கத் தயாராக இருக்குமாறும் –
அதற்காக தனது தன்னம்பிக்கையை  வளர்த்துக்கொள்ளுமாறும்; – அகிம்சாவாதிகளாக இருந்தாலும் தற்காப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு எனது பெரிய தந்தை அடிக்கடிக் கூறுவார்” என தனது பெரிய தந்தையிடமிருந்து  தோழருக்குக் கிடைத்த ஆலோசனைகள் பற்றி தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறுவார்!

அதே நேரம் உடற்பயிற்சி குறித்தும் தோழரின் பெரிய தந்தையார் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்! இதனால் அவர் நீச்சல் பயிற்சியையும் கராத்தே தற்காப்புப் பயிற்சியையும் தோழருக்குக் கட்டாயமாக்கி இருந்தார்! இது பற்றி தோழர் ஒருமுறை கூறும்போது –

‘நான்  ஒட்டுசுட்டான் பண்ணையருகில் இருந்த குளத்தில் சிறு வயது முதலே நீந்தக் கற்றுக் கொண்டேன்!
அதற்கு மேலதிகமாக வெள்ளவத்தைக் கடலிலும் நீச்சல் பயிற்சி பெற்றேன்!
அதுமட்டுமல்லாமல் சில வேளைகளில் வேட்டைக்குச் சென்றும் அந்த அனுபவங்களையும் பெற்றுக் கொண்டேன்!”

கத்தியின் செயற்பாடானது – ஒரு மருத்துவரிடம் இருக்கம்போது அது உயிர்களைக் காக்கும்!
அதே கத்தி ஒரு கொலையாளியிடம் இருக்கும்போது உயிர்களை காவு கொள்ளும்! அதுபோல்தான்  இந்தத் துப்பாக்கிப் பயிற்சியும்! தோழரின் கைக்கு அது கிடைத்தபோது ஒரு மருத்துவரின் கையிலிருக்கக் கூடிய கத்தியைப் போன்றதாகவே அது  காலங்காலமாக இருந்தது!

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முதன் முதலில் துப்பாக்கிச் சுட பயிற்சி எடுத்த இந்த ஒட்டுசுட்டான்,  முத்தையன்கட்டு பண்ணையில் யுத்தகாலத்தில் இடம் பெயர்ந்தவர்கள், காணி அற்றவர்கள் பலர் அங்கு  வந்து குடியேறி இருந்தனர்!

2009ம் வருடத்திற்குப் பின்னர் அங்கு சென்ற தோழர் அவர்கள் அங்கு குடியிருந்தவர்களுக்கு இலவசமாக அக் காணியைப் பகிர்ந்து அதற்கான உறுதிகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தமை குறிப்பிடத்தக்கது!

(தொடரும்)

Related posts: