6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, May 31st, 2025

2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான முதல் சுற்று மேன்முறையீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேன்முறையீடு மூலம் பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான விடயங்கள், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரால் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

000

Related posts: