200 வீதி அடையாளங்களுக்கான சமிஞ்ஞை இயந்திரங்களை பொருத்த மோட்டார் போக்குவரத்துத் துறை நடவடிக்கை!

Friday, March 7th, 2025

நகரங்களில் நிறுவப்பட்டுள்ள 200 வீதி அடையாளங்களுக்கான சமிஞ்ஞை இயந்திரங்களை பொறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிதி முதல் கட்டமாக 56 மில்லியன்  ரூபாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, இதில்  33 மில்லியன்  ரூபா சமீபத்தில் நகர மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் போக்குவரத்து சமிஞ்ஞைகள் செயல்பாட்டில் இருக்கும்போது, ​​சாரதிகளுக்கு சரியான நேரத்தில் வீதி சமிஞ்ஞைகளை அது காட்சிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் வாகனத்தின் இயந்திரத்தை இயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதன் மூலம் எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கும் என்றும் தேவையற்ற புகைகள் குறையும் என்றும் மோட்டார் போக்குவரத்துத்துறை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: