வேலணை மத்தியின் மாணவர்களுக்கு பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட வீதி போக்குவரத்து விழிப்புணர்வு!…..

Thursday, November 6th, 2025


அதிகரித்துவரும்
வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான
வீதி விதி முறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று  ஊர்காவற்றுறை  பொலிசாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது.

வேலணை மத்திய கல்லூரி அதிபரது முழுமையான ஒத்துழைப்புடன் ஊர்காவற்றுறை வீதிப் போக்குவரத்து பிரிவுப் பொலிசாரின் ஒழுங்கமைப்பில் குறித்த விழிப்புணர்வு இன்றையதினம் (6) காலை வேலணை மத்திய கல்லூரியின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பிரதானான பொலிஸ் பரிசோதகர் பிரபாகரனின் பிரசன்னத்துடன்
ஊர்காவற்றுறை வீதிப் போக்குவரத்து பிரிவு உதவி பொலிஸ் அதிகாரி சமன் குமார தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வில் வீதி ஒழுங்கு தொடர்பில் மாணவர்களுக்கு செயன்முறைகளூடாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன் முறையற்ற போக்குவரத்து முறைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு செயலமர்வில் வேலணை மத்தியகல்லூரியின் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:


இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா ஒத்துழைக்கும் - இந்திய நிதியமைச்சர் அறிவிப்...
தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எந்த தீர்மானத்தையும் தேர்தல் ஆணைக்குழு எடுக்கவில்லை - நாடாளுமன்றத்தில...
காங்கேசன்துறை - நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாகக்  காணப்படுகின்ற முறைப்பா...