வேலணையின் அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் விசேட ஆராய்வு!

Saturday, April 25th, 2026


………
வேலணை பிரதேசத்தில் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் வட்டாரக் கட்டமைப்புக்களை மீள் கட்டமைக்கும் பொறிமுறை குறித்த கலந்துரையாடல் ஒன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்ற குறித்த கூட்டத்தின் போது சமகால அரசியல் நிலைமைகள்,  மக்களின் வாழ்வியல் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

விசேடமாக நடந்துமுடிந்த நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னரான கட்சியின் முன்நகர்வுகளில் இருக்கின்ற இடர்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதனை வெற்றிகரமாக முன்னகர்த்தும் பொறிமுறைகள் குறித்தும் செயலாளர் நாயகத்தினால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் வட்டாரக் கட்டமைப்பை மீள் வலுவாக்குமாறும் செயலாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டது.
000

Related posts:

இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் வலிமைகளை பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏ...
மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய மின்சார சபைக்கு அனுமதி - நாளைமுதல் எரிபொருள் விநியோகமும...
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் துறைசார் அமைச்சர் ...