வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
Thursday, February 13th, 2025
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
அத்துடன், தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலையும் தொடரக்கூடுமென அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே சிறியளவில் மழை வீழ்ச்சி பதிவாகினாலும், வெப்பமான காலநிலை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
மழை பெய்வதற்கு ஏற்ற அளவிலான திறன் கொண்ட மேகங்களின் உருவாக்கம் குறைவாகக் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார்.
000
Related posts:
பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கோத்தபாய ராஜபக்ச?
13 ஆவது திருத்தத்தை இலங்கை நடைமுறைபடுத்தும் - இந்தியா பிரதமர் மோடி அதீத நம்பிக்கை!
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06 இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்மு...
|
|
|


