வீதியில் சென்ற நபரிடம் பணம் மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளையடித்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது!

Tuesday, February 18th, 2025

வீதியில் சென்ற நபர் ஒருவரது 25 ஆயிரம் ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளையடித்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நபர் ஒருவர் மதுபான போத்தல்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணத்துடன் மூளாய் வீதியால் பயணித்துள்ளார். இதன்போது வீதியால் வந்த இருவர் அவரது மதுபான போத்தல்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூளாய் நேரம் பகுதியை சேர்ந்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றையதினம் முற்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

000

Related posts:

“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பில் அனைவரும் கலந்து கொள்வோம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோ...
யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு விபத்துக்கள் - மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு!
மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

மிருக வதையை கட்டுப்படுத்த கட்டளைச் சட்டத்தில் திருத்தம் - வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்ச...
புரிந்துணர்வை எட்டுவதற்கு ஒருமாதம் கால அவகாசம் - தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு தெரிவிப்பு!
பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் ஒத்துழைப்பு வழங்குங்கள் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் வ...