வாகன இறக்குமதி இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது – மத்திய வங்கி வலியுறுத்து!
Wednesday, October 9th, 2024
வாகன இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி, இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பொருட்களின் இறக்குமதி தடை படிப்படியாக நீக்கப்பட்ட போதும் வாகன இறக்குமதிக்கான தடை இன்னும் நீக்கப்படவில்லை.
அவ்வாறான நிலையில் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டாலும் அது இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது என்று இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது
000
Related posts:
அரசுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் ஜனவரி 1 ஆம் திகத...
ஜூலையில் மின் கட்டணத் திருத்தம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|
|


