வல்லை பாலத்துக்கு அருகில் விபத்தில் – ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!.
Saturday, October 12th, 2024
யாழ்ப்பாணம் – வல்லை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
சாவகச்சேரி நகராட்சி மன்ற தேர்தலில் ஒன்பது கட்சிகள் போட்டி!
வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களுக்கான அறிவிப்பு!
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது -. பெறுபேறுகளை ஓகஸ்ட் ந...
|
|
|


