வலி மேற்கு பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர்தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நிதியுதவி!
Thursday, October 3rd, 2024
வலி மேற்கு பிரதேசத்தை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த முன்பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு அமைய, ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, கடந்த காலங்களில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முன்பள்ளி ஆசிரியர்கள் அடைந்த நன்மைகளை நன்றியுடன் நினைவுபடுத்திய முன்பள்ளி ஆசிரியர்கள், தற்போது போதிய சம்பளம் இன்மை உட்பட தாங்கள் எதிர்கொள்ளுகின்ற அசௌகரியங்கள் தொடர்பாகவும் எடுத்துரைததனர்.
அத்துடன், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி. வெற்றி பெற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும், அதற்காக தங்களுடைய பங்களிப்பினை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், வடக்கு மாகாணசபை தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்யாமை காரணமாகவுமாகவும் குறித்த முயற்சி நிறைவேறவில்லை எனவும், நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அதற்கான முயற்சிகள் தொடரப்படும் எனவும் தெரிவித்ததுடன், இம்முறை ஆசிரியர் தினத்தினை கொண்டாடுவதற்காக கட்சி நிதியிலிருந்து ஒரு தொகை நிதியினை தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில், கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு வந்த முன்பள்ளி ஆசிரியர்களின பிரதிநிதிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து காசோலையை பெற்றுக் கொண்டனர்
000
Related posts:
|
|
|


