வலி கிழக்கில் ஈ.பி.டி.பியை கட்டமைப்பு ரீதியில் செழுமைப்படுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, January 26th, 2025


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர், மற்றும் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன் இன்று (26.01.2025) கலந்துரையாடலொன்றை செயலாளர் நாயகம் முன்னெடுத்திருந்தார்.

இதன்போது குறிப்பாக வலி கிழக்கு பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை செழுமைப்படுத்தும் வகையிலான பொறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டதுடன்கட்டமைப்பு ரீதியான வலுப்படுத்தலும் இடம்பெற்றன. 

குறிப்பாக வலி கிழக்கில் கடந்த நாடளுமன்ற தேர்தலில் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், தேர்தலின் பின்னடைவுகள் குறித்த அக, புற காரணிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் கட்சியின் செயற்பாடுகளை மேலும் செழுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் வகையில்
கட்சியின் தேசிய மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு தயாராகுமாறும் குறித்த பிரதேச கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமையும் குதிப்பிடத்தக்கது.
0000

Related posts:

ஊர்காவற்றுறை பரமன் கோரிக்கை - சுயதொழில் முயற்சிக்காக தொழில்துறை இயந்திரமொன்றை வழங்கிவைத்தார் அமைச...
பல்வேறு குற்றங்கள் - நீதிமன்றங்களால் இரத்து செய்யப்பட்ட 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்க...
வேலணையில் வசமாக மாட்டிய வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ் நகருக்கு கொண்டு செல்ல முயன்ற த...