வரித்தொகை விவகாரம் – மென்டிஸ் நிறுவனத்திற்கு 30 ஆம் திகதிவரை காலக்கேடு – தவறினால் உற்பத்தி உரிமம் நிறுத்தப்படும் – மதுவரி திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, November 13th, 2024
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நிலுவையில் உள்ள வரித்தொகையினை W.M.மென்டிஸ் நிறுவனம் செலுத்தத் தவறினால், அதன் மதுபான உற்பத்தி உரிமத்தினை இழக்க நேரிடும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனை குறித்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, W.M.மென்டிஸ் நிறுவனம் திறைசேரிக்கு 5. 5 பில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிலுவைத் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தத் தவறும் நிலையில், மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரி திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
000
Related posts:
எவன்ட் கார்ட் மூலம் கடற்படைக்கு 233 கோடி வருமானம்!
மருத்துவ பீடத்திற்கு சைட்டம் மாணவர்கள் இணைக்கப்படின் கல்வித் தகைமை பரிசீலனை செய்யப்பட வேண்டும்!
வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று!
|
|
|


