வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் !

Monday, December 2nd, 2024

வட மாகாணத்தில் இன்று (02) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் ன வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

000

Related posts:

பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒ...
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வலியு...
டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது - சுகாதார ...