கல்சியத் தண்ணீரை குடித்த முடியவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!
Monday, February 17th, 2025
யாழ்ப்பாணத்தில், கல்சியத் தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர் கடந்த 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசன் மைக்கல் (வயது 85) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 14 ஆம் திகதி தவறுதலாக கல்சியம் கலந்த தண்ணீரை அருந்தியுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
000
Related posts:
கச்சதீவு அந்தோனியார் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்!
உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை!
சமுர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம் - பிரதமர் அறிவிப்பு!
|
|
|


