வட்டு இந்து கல்லூரயில் நடைபெற்ற PPL கிரிக்கெட் தொடர்!
Tuesday, April 21st, 2026
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு இடையிலான PPL கிரிக்கெட் தொடரானது நேற்றுமுன்தினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மைதானத்தில் ஆரம்பமாகியது.
குறித்த போட்டியில் 17 அணிகள் மோதின. போட்டியானது 6 ஓவர்களை கொண்டதாக அமைந்தது. இதன்போது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்களுக்கும் தற்போது கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயும் ஒரு போட்டியும் இடம்பெற்றது. அந்தவகையில் நேற்றையதினம் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் 2014ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டு அணிகள் மோதின.
இதன்போது 2014வது ஆண்டு அணியானது ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடி 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு தெடுப்பெடுத்தாடிய 2018ஆம் ஆண்டு அணியானது 101 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கியது.
அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசில்கள் வழங்தும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த போட்டியாது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் சி.தனஞ்சயன், பழைய மாணவரான வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் அ.அற்புதராஜ், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
000
Related posts:
|
|
|


