வடமராட்சி அண்ணாவியாரை கௌரவித்த டக்ளஸ்!
Wednesday, February 25th, 2026
யாழ் மாவட்டத்தின் கலை, கலாசார உயர்ச்சிக்காகவும், மக்களின் கலாசார மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றியமைக்காக
கலாபூசணம் விருது பெற்ற வேலாயுதம் நந்தகுமார்,
(அண்ணாவியார்)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் பிறந்து வாழ்ந்து தனது பிரதேசத்தில் “வேணுகான சபா மன்றத்தின்” ஊடாக கலை கலாசார பண்பாடுகளை வளர்த்து பாதுகாத்து வந்த அண்ணாவியார் கிராமிய நாடக இசைத்துறையில் இத்துறைசார்ந்த பல தரப்பட்டவர்களால் பல்வேறு விருதுகளை பெற்றுக் கௌரவிக்கப்பட்டிருந்தார்
இந்நிலையில் தற்போது அண்ணாவியாருக்கு குறித்த துறையின் அதி உச்ச விருது துறைசார் அமைச்சினால் வழங்கப்படு கௌரவிக்கப்பட்டுள்ளமைப்குறிப்பிடத்தக்கது.
Related posts:
அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பும் விடிவெள்ளியாக திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா - முல்லை. கேப்பாப்புலவு ...
தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெர...
கடற்றொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு விசேட திட்டம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
|


