வடக்கு மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் தொடருந்து சேவையின் பயண நேரத்தில் இன்றுமுதல் மாற்றம்!
Monday, July 7th, 2025
வடக்கு மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் தொடருந்து சேவையின் பயண நேரத்தில் இன்று முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கல்கிஸ்ஸ முதல் காங்கேசன்துறை வரை, வார இறுதி நாட்களில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வந்த சொகுசு கடுகதி தொடருந்து சேவையானது, இன்று முதல் நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேநேரம், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடும் யாழ்தேவி தொடருந்து சேவையின் நேரத்திலும், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
000
Related posts:
அமைச்சர் ஹக்கீமின் தாயார் காலமானார்!
விமான சேவைகள் இடை நிறுத்தம்!
நவம்பர் 1 முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாய...
|
|
|


