வடக்கின் பிரதி தொழில் ஆணையாளரானர் ஶ்ரீமதி ராஜமல்லிகை!

Wednesday, November 26th, 2025


…..
தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் இன்றையதினம்  (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண தொழில் அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் கடந்த ஒக்ரோபர்16 தொடக்கம் யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளராக பணியாற்றி இன்று வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக மாற்றம் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: