வங்களாவடியில் திறக்கப்பட்டது புதிய கோப் சிற்ரி – கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையளரால் சம்பிரதாய பூர்வமக திறந்துவைப்பு!

…………
வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வர்த்தக கிளை (கோப் சிற்ரி) இன்று வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமை கட்டடத் தொகுதியில் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையளர் கி.சந்திரசேகரன் அவர்களல் நடாவெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் த.தர்மராஜேந்திரன் தாலைமையில் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகள் பணியாளர்களது பிரசன்னத்துடன் குறித்த நிகழ்வு இன்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது.
நீண்டகாலமாக தேவையான பொருட்களை வேலணை நுகர்வோருக்கு குறைந்த விலையில் நம்பகத் தன்மையுடன் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது நவீன வசதிகளுடன் குறித்த வர்த்தக கிளை திறந்துவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
0900
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக சலுகை!
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால விசா - அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அம...
நிர்ணய விலைக்கு உட்பட்ட பொருள் தொடர்பில் மாத்திரமே சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் - நுகர்வோர் அதிகார ச...
|
|