வகுப்பறைக் கிரகித்தலே சாதனையாக்கியது – கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன்!
Wednesday, April 1st, 2026
……
வெளியாகிய உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தினை சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளார்
தனது சாதனை குறித்து அவர் கூறுகையில் –
பாடசாலையில் ஆசிரியர் கற்பிப்பதை மிகுந்த சிரத்தையுடன் கிரகித்துக் கொள்வேன்.
கிரகித்தலே என்னை சாதனையாகனாக்கியது என்றார்.
இதேநேரம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் 8,300 பரீட்சார்த்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
இதில் 7,477 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள், 823 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகும்.
இந்த ஆண்டிற்கான பரீட்சைக்கு மொத்தம் 281,810 பேர் பங்கேற்றனர்.
இவர்களில் 176,527 மாணவர்கள், அதாவது 62.64 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், பல்வேறு காரணங்களுக்காக 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
000
Related posts:
|
|
|


