ரஷ்யாவுக்கு அருகே அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு – பல நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Wednesday, July 30th, 2025
ரஷ்யாவுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வையடுத்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 8.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை எச்சரிக்கையையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களைக் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலை எச்சரிக்கையும் அமுலில் உள்ளது.
ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் கலிபோர்னியா,அலஸ்காவின் அலூடியன் (Aleutian) தீவுகளின் சில பகுதிகளுக்கும், ஜப்பானுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
3 மாத குழந்தை வரலாற்றுச் சாதனை!
ரயில் விபத்தில் : பாகிஸ்தானில் 11 பேர் உயிரிழப்பு!
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி கட்டணத்தை உடனடியாக குறைக்க முடியாது - மின்சாரக் கட்டணத்த...
|
|
|


