ரயில் நிலைய கூரை உடைந்து வீழ்ந்தது – செர்பியாவில் 14 பேர் உயிரிழப்பு!
Sunday, November 3rd, 2024
செர்பியா நாட்டின் வடக்கு மாகாணம ஓடினா மாகாணம் நோவி சட் நகரில் அமைந்துள்ள ரெயில் நிலையத்தில் திடீரென ரெயில் நிலையத்தின் கொங்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டுள்ளனர்.
இறந்தவர்களில் ஆறு அல்லது ஏழு வயதுடைய சிறமியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை (11:00 GMT) மணிக்கு இடிந்து வீழ்ந்துள்ளது. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் , செர்பியா நாட்டில் இன்று துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று ஆராய்வு!
கைதிகள் விடுதலை தொடர்பில் மனித உரிமை பேரவையோ சர்வதேச சமூகமோ செல்வாக்கு செலுத்த முடியாது – அமைச்சர் ந...
மழைக் காலத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் - தேசிய பாதுகாப்பு தொ...
|
|
|


