யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

Thursday, October 17th, 2024

யாழ்.மாவட்ட செயலகத்தின், காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (16) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது கருத்துதெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இக் கூட்டத்தின் நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதும், நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதாகவும்  தெரிவித்தது.

 இவ் மீளாய்வுக் கூட்டத்தில் நிதி முன்னேற்றங்களை ஆராய்ந்த வகையில்  திருப்திகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும்  உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

000

Related posts: