யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஐ. நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க்!

Saturday, June 14th, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

இதன் ஒரு பகுதியாகவே, அவர் யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 25ஆம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலதரப்பினரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

அத்துடன், இறுதிப்போரில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பிலும் அவர் ஆராய்வார் என்று தெரியவருகின்றது.

இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாத அமர்வில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆதலால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் யாழ்ப்பாணம் வருகின்றமை முக்கியத்துவம் மிக்க விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

000

Related posts: