யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Saturday, December 28th, 2024

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் வாரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தினங்களாக இரண்டு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

000

Related posts: