மே.இ.தீவுகளுடனான டி- 20 தொடரை 5-0 என்ற கணக்கில் தனதாககியது அவுஸ்திரேலியா!

Tuesday, July 29th, 2025

டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டி:20 தொடரில் அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளை 5-0 என்ற கணக்கில் ‘வைட்வோஷ்’ செய்தது.

செயிண்ட் கிட்ஸில் திங்கட்கிழமை (28) இரவு நடந்த இறுதி டி:20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 170 ஓட்டங்களை எடுத்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி, பவர்பிளேக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இரு தொடக்க வீரர்களையும் பென் துவார்ஷுயிஸ் ஆட்டமிழக்க வைத்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் இன்னிங்ஸில் ஷிம்ரான் ஹெட்மேயர் ஒரு சிறந்த அரைசதம் அடித்தார்.அவர் 31 பந்துகளில் 167.74 ஸ்ட்ரைக் ரேட்டில் 52 ஓட்டங்களை எடுத்தார்.

அவரது இன்னிங்ஸில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். ஆனால் அவர் டுவார்ஷுயிஸால் ஆட்டமிழந்தார்.

ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் ஹெட்மியருக்கு நல்ல இணைப்பாட்டத்தை வழங்கியதுடன் 17 பந்துகளில் 205.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரது இன்னிங்ஸில் ஆறு பவுண்டரிகளும் மற்றும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

பின்னர்,வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, மூன்று விக்கெட்டுகள் மற்றும் மூன்று ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 173 ஓட்டங்களை எடுத்து அந்த இலக்கை கடந்தது.

இலக்கை துரத்திய அவுஸ்திரேலியா அணி, கடந்த போட்டியின் நாயகன் கிளென் மேக்ஸ்வெல்லை இழந்து மோசமான தொடக்கத்தையே பெற்றது.

அதன்படி, அவர்கள் 25 ஓட்டங்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தனர்.

எனினும், டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் 35 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை மீட்டெடுக்க வழி அமைத்தனர்.

பின்னர் மிட்செல் ஓவன் கிரீனுடன் இணைந்து 28 பந்துகளில் 63 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை உருவாக்கி அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.=

கிரீன் (18 பந்துகளில் 32 ஓட்டம்), டேவிட் (12 பந்துகளில் 30 ஓட்டம்), ஓவன் (17 பந்துகளில் 37 ஓட்டம்), மற்றும் ஆரோன் ஹார்டி (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டம்) ஆகியோர் அவுஸ்திரேலியாவின் வெற்றியைப் பாதுகாக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக, அகீல் ஹொசைன் தனது நான்கு ஓவர்களில் 4.20 என்ற சராசரியில் 17 ஓட்டங்களை வழங்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக அவுஸ்திரேலியாவின் பென் த்வார்ஷுயிஸ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

அதேநேரத்தில், கிரீன் தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரீன் தொடர் முழுவதும் சிறந்த நிலைத்தன்மையைக் காட்டினார்.

ஐந்து போட்டிகளில் 68.33 என்ற சராசரியுடனும், 164.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தமாக 205 ஓட்டங்களை எடுத்தார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும்

00

Related posts: