மென்பொருள் சேவைளுக்கான 18 வீத வரி -இளம் தலைமுறையினரை சிரமங்களுக்குள்ளாக்குகின்றது – கலாநிதி ஹர்ச டி சில்வா!
Sunday, April 5th, 2026
…….
எதிர்வரும் 08 ஆம் திகதிமுதல் நடைமுறையாகும் வகையில் மென்பொருள் சேவைகள் மீது 18 வீத வற் வரியினை விதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிய வருகிறது.
குறித்த நடவடிக்கை காரணமாக தற்போதைய அரசாங்கம் இந்நாட்டு இளம் தலைமுறையினரை பலத்த சிரமங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தின்போது, மென்பொருள் துறைக்கென வரி சலுகை வழங்கப்படும் எனவும், வற் வரி நீக்கப்படுமெனவும் ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடானது அந்த வாக்குறுதியை முழுமையாக மீறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
திசைகாட்டி அரசாங்கம் ஆட்சியதிகாரத்திற்கு வருமுன்னர் வழங்கிய வாக்குறுதிகளை மீறி தற்போது வரி அறிவிட நினைப்பது இளம் தலைமுறையினருக்கு செய்கின்ற அநீதியாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வரி அறவீடு காரணமாக துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்ற மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத் துறையின் எதிர்கால பயணம் தடைப்படுவதாகவும், அது முழுமையாக அக் கைத்தொழிலை பின்னடைவு காணச் செய்துவிடும் எனவும் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்
Related posts:
|
|
|


