முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் பெப்ரவரி 13ஆம் திகதி நிறைவுறும்!

Saturday, November 8th, 2025



2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது.

ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000

Related posts:


மக்கள் சேவைக்காக உழைக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - இர...
தடுப்பூசி செயல்முறையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு முன்பே, துரதிஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்...
இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார் ரணில் விக்ரமசிங்க!