முடிவடையும் நிலையில் டிரம்ப் வழங்கிய 90 நாள் காலவகாசம் – கூட்டு அறிக்கை எங்கே என எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடா கயந்த கேள்வி!
 Tuesday, July 1st, 2025
        
                    Tuesday, July 1st, 2025
            
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய 90 நாள் காலவகாசம் முடிவடையும் நிலையில் உள்ளது என எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அரச நிதி மூலோபாய கூற்று வெளிப்படுத்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டு, முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அரசாங்கமும் அந்த நிபந்தனைகளை செயற்படுத்துகிறது.
தொங்கு பாலத்தில் செல்ல வேண்டிய நிலை தான் காணப்படுகிறது. ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளில் இருந்து விலகினால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதை நாங்களும் நன்கு அறிவோம். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உண்மையை மறைக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் பலமுறை அரசாங்கத்திடம் வலியுத்தினோம்.
தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் இறுதி தீர்மானம் தொடர்பில் இலங்கை மற்றும் அமெரிக்க கூட்டு அறிக்கையை வெளியிடும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆனால் இதுவரையில் கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய 90 நாள் காலவகாசம் முடிவடையும் நிலையில் உள்ளது.
அரசாங்கம் இந்த 09 மாத காலப்பகுதியில் பிரபல்யமாக எடுத்த திட்டங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளன.என்றார்.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        