மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அழைப்பு – திட்டம் தன்னிடம் இல்லை என்கிறார் ரணில்!
Monday, February 17th, 2025
எதிரணிகளை வழிநடத்துவதற்காக நாடாளுமன்றம் வருமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிரணி உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை ரணிலிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், நாடாளுமன்றம் வருவதற்குரிய திட்டம் தன்னிடம் இல்லை என்றும், நாடாளுமன்றத்துக்கு வெளியில் அரசியல் பயணம் தொடரும் என்றும் ரணில் அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் வருவதாக இருந்தால் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியைத் துறப்பதற்குத் தயார் என ரவி கருணாநாயக்க மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் - ஜனாதிபதி !
பல முக்கிய நகரங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனை...
|
|
|


